நித்திரவிளை: 1350 பாக்கெட் குட்கா பறிமுதல்; வாலிபர் கைது
நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்தலிப் (35). இவர் தற்போது காஞ்சாம்புறம் என்ற பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். முத்தலிப் தான் தங்கியிருக்கும் வீட்டில் குட்கா, புகையிலை பதுக்கி வைத்திருப்பதாக நித்திரவிளை போலீசாருக்கு நேற்று (அக்.,18) இரவு 9 மணி அளவில் தகவல் கிடைத்தது. உடனடி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நித்திரவிளை போலீசார் முத்தலிப் வீட்டை சோதனை செய்தபோது அங்கு 90 பண்டல்களில் 1350 பாக்கெட் குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்திய போது, மீனவ கிராமங்களில் வெற்றிலை பாக்கு விற்பனை செய்து போல சென்று மீன்பிடி தொழிலாளிகளுக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் ஒவ்வொரு பண்டல்களாக விற்பனை செய்து வருவதாக தெரிய வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் முத்தலிப் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.