கருங்கல்: போதகர், 2 பெண்கள் மீது தாக்குதல்

81பார்த்தது
கருங்கல்: போதகர், 2 பெண்கள் மீது தாக்குதல்
கருங்கல் அருகே உள்ள பள்ளியாடி முருங்கைவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் தேவ விஜின் (49) இவர் போதகர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மேரி ஸ்டெல்லா (45) என்பவருக்குச் சொந்தமான சொத்தை விலைக்கு வாங்கி, அந்த வீட்டில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரார்த்தனை செய்வது வழக்கம். 

இதில் மேரி ஸ்டெல்லா, பள்ளியாடியைச் சேர்ந்த ராணி (42) உட்பட பலரும் கலந்துகொள்வார்கள். வழக்கம்போல் நேற்றுமுன்தினம் தேவ விஜின் வீட்டில் நடந்த ஜெப நிகழ்ச்சியில் மேரி ஸ்டெல்லா, ராணி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது திடீரென மேரி ஸ்டெல்லாவின் சகோதரர் ஸ்டீபன் (55), அவரது மனைவி ஐடா மற்றும் மகன் ஆகியோர் வந்து தகராறு செய்து ஜெபம் கொண்டிருந்தவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதில் தேவ விஜின், ராணி, மேரி ஸ்டெல்லா படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் விசாரணையில் ஸ்டீபன் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி