தக்கலை: வீட்டிற்குள் அழகிய நிலையில் தொழிலாளி பிணம்
தக்கலை அருகே உள்ள திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணதாஸ் (53). இவரது 3-வது அண்ணன் அய்யாதுரை (59). தச்சு வேலை செய்து வந்தார். திருமணம் ஆகவில்லை. அதனால் தனியாக வசித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களாக அண்ணனை காணாததால் நேற்று (11-ம் தேதி) கிருஷ்ணாதாஸ் அவரின் வீட்டுக்கு சென்றார். அப்போது கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. மேலும் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த கிருஷ்ணதாஸ் உறவினருடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அய்யாதுரை இறந்து உடல் அழுகி கிடப்பது கண்டனர். இது குறித்து கிருஷ்ணதாஸ் தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யாதுரை எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.