மதுரையில், தவெக சார்பில் சுமார் 150 நாட்களாக ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி வந்த விலையில்லா விருந்தகத்தை போலீசார் நேற்று (நவ. 11) அகற்றினார்கள். விருந்தகம் இருந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்ததாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையில் தவெக மாநாட்டுக்கு பிறகு நெருக்கடிகள் அதிகரித்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.