நடிகர்கள் சிம்பு, பரத் இணைந்து நடித்த ’வானம்’ திரைப்படத்தை இயக்கியவர் கிரிஷ் (46). இவர் பல தெலுங்கு படங்களை இயக்கியுள்ளார். இவருக்கும், பிரீத்தி என்ற மருத்துவருக்கும் நேற்று (நவ. 11) ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது. இது கிரிஷ் மற்றும் பிரீத்தி ஆகிய இருவருக்குமே இரண்டாவது திருமணம் ஆகும். திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.