தமிழ்நாடு முழுவதும் உள்ள 544 கூட்டுக் குடிநீர் திட்டங்களை ஆன்லைன் வழியே கண்காணிப்பதற்கான பணிகளை மேற்கொள்ள ரூ. 239 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி நவீன கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். கூட்டுக் குடிநீர் திட்டங்கள் வாயிலாக 13 மாநகராட்சிகள், 70 நகராட்சிகள், 323 பேரூராட்சிகள், 51,048 ஊரக குடியிருப்புகள், 576 தொழிற்சாலைகளின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது.