பத்மநாபபுரம் - Padmanabhapuram

தக்கலை: குடும்ப பிரச்சனையில் தாய் மகன் மீது தாக்குதல்

தக்கலை: குடும்ப பிரச்சனையில் தாய் மகன் மீது தாக்குதல்

தக்கலை அருகே உள்ள கல்லன்குழி பகுதியை சேர்ந்தவர் நெல்சன் மகள் மோனிஷா (35). இவரது கணவர் ராஜ்குமார் (39). தற்போது குடும்பத் தகராறில் பிரிந்து வாழ்கிறார்கள். இது தொடர்பாக நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது. இந்த நிலையில் சமரசம் பேசி தீர்க்க மோனிஷாவின் சகோதரர் மெர்லின் (28) முடிவு செய்து ரஜிகுமார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பேசி வந்தார். ஆனால் சமரசம் ஏற்படவில்லை. இந்த நிலையில் சம்பவ தினம் மெர்லின் மற்றும் அவர் தாயார் ரோஸ்லெட் (60)ஆகியோர் தக்கலை பகுதியில் நிற்கும் போது, ராஜ்குமார் மற்றும் அவருடன் வந்த உறவினர் உஷா (49) ஆகிய இரண்டு பேர் தகராறு செய்து மெர்லினை தாக்கியதுடன் தடுக்க வந்த தாயார் ரோஸ்லெட்டை கீழே தள்ளி கல்லால் தாக்கியுள்ளனர்.   இதழ் படுகாயம் வந்த 2 பேரும் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   தக்கலை  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా