பிரபல தொழிலதிபரும் மதுரா டிராவல்ஸ் நிறுவனருமான கலைமாமணி வி.கே.டி.பாலன் காலமானார். சுற்றுலாத்துறை முன்னோடியான வி.கே.டி.பாலன் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (நவ.11) சென்னையில் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். வி.கே.டி.பாலனின் இறுதிச் சடங்கு, நாளை (நவ.12), சென்னை, மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.