எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நீலிக் கண்ணீர் வடிக்கிறார் என திமுக குற்றம்சாட்டியுள்ளது. திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், இபிஎஸ் முதல்வராக இருந்தபோது ஆசிரியர்களுக்கு இவ்வளவு சம்பளமா என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைக் கேவலப்படுத்தினார். இப்போது, ஆசிரியர், அரசு ஊழியர்களுக்காக இந்த அரசு எதுவும் செய்யவில்லை எனக் கூறி நீலிக் கண்ணீர் வடிக்கிறார். ஆனால், திமுக அரசு ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் போற்றிப் பாதுகாத்து வருகிறது" என்று தெரிவித்துள்ளது.