குமரி: தாயுடன் இணைத்து பேசிய தந்தைக்கு கத்தி குத்து
குலசேகரம் அருகே தும்பகோடு பகுதியை சேர்ந்தவர் சசி (55). கொத்தனார். இவரது மனைவி விஜயா (50). இந்த தம்பதிக்கு அனி (27) , சஞ்சு (26) என இரண்டு மகன்கள் உள்ளனர். சசிக்கு குடிப்பழக்கம் உண்டு. மனைவி விஜயா மீது அடிக்கடி சந்தேகப்பட்டு தகராறு செய்வார். அதிலும் சற்று எல்லை மீறி, தனது இரண்டாவது மகன் சஞ்சுவையும் மனைவி விஜயாவை இணைத்து கேவலமாக பேசுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் சசி குடித்துவிட்டு வந்து வீட்டில் இருந்த மனைவியிடம் பெற்ற மகனை கணவர் போல் சித்தரித்து ஆபாசமாக பேசி உள்ளார். இதை கேட்ட மகன் சஞ்சு ஆத்திரத்தின் உச்சம் சென்று கத்தியை எடுத்து சற்றும் யோசிக்காமல் சசியை சரமாரியாக குத்தினார். மேலும் கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து சசி ஆம்புலன்ஸ் மூலம் குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து விஜயா குலசேகரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சஞ்சுவை தேடி வருகின்றனர்.