தக்கலை:   2 கடைகளில் திருட்டு ;  போலீசார் விசாரணை

56பார்த்தது
தக்கலை அருகே செங்கோடி பகுதியை சேர்ந்தவர் வசந்தா. இவர் அழகியமண்டபம் பகுதியில் டி வி ரிப்பேர் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடை திறக்க வந்த போது, கடை பூட்டுகள் உடைக்கப்பட்டு,   கடையில் வைத்திருந்த ரூபாய் 11 ஆயிரம் மற்றும் இரண்டு ஆம்ப்ளிபயர் திருட்டு போயிருந்தது. தக்கலை போலீசார்  சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.

      மேலும் மேட்டுக்கடை பகுதியில் சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அங்கும் கதவை உடைத்து கடைக்குள்  புகுந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் மற்றும் பொருட்களை திருடி சென்றுள்ளனர். இது குறித்தும் சிசிடிவி பதிவுகள் அடிப்படையில்  போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி