தனுஷ் - நயன்தாரா இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது ராதிகா பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், நானும் ரவுடி தான் ஷூட்டிங் முடிந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளரான தனுஷ், ராதிகாவை தொடர்பு கொண்டு, விக்கி-நயன் திருமணம் குறித்து பேசியுள்ளார். இதனைக் கேட்ட ராதிகா நம்பவில்லை. இதனால், “அக்கா உங்களுக்கு வெக்கம் இல்லையா? உங்க கண்ணு முன்னாடி தான் நடக்குது” என தனுஷ் கிண்டல் அடித்ததாக ராதிகா தெரிவித்துள்ளார்.