மேற்கு வங்க மாநிலம் அலிபுர்தூரில் தனியார் பள்ளி ஆசிரியர், கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண் உறுப்பு வெட்டப்பட்டு அவருடைய வாயில் திணிக்கப்பட்ட நிலையில் அவர் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனிப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த கொலையில் தொடர்புடையவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.