கருங்கல்: தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
கருங்கல் அருகே பூட்டேற்றி பகுதியை சேர்ந்தவர் சுதர்சன குமார் (48). எலக்ட்ரிக்கல் பைப் தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுதர்சனகுமார் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி சேர்ந்தனர். அங்கு சிகிட்சை பலனின்றி சுதர்சனகுமார் நேற்று (அக்.,9) இரவு உயிரிழந்தார்.கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.