அருமனை: தீப்பிடித்து எரிந்த இரண்டு பைக்குகள்; தீ விபத்து
அருமனை அருகே பனச்சமூடு பகுதியைச் சேர்ந்த சமயேந்திரன் (54). இவரது வீட்டின் அருகே ரப்பர் சீட் உலர்கூடம் வைத்திருந்தார். உலையில் தீ மூட்டி ரப்பர்களை உலர்வைத்துவிட்டு வீட்டில் உறங்கச் சென்றார். நேற்று (15-ம் தேதி) அதிகாலை உலர்கூடத்தில் இருந்து தீப்பொறி பறந்து வெளியில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் தீப்பிடித்து வீட்டின் ஜன்னல் வழியாக வீட்டில் உள்ளே புகைமூட்டம் ஏற்பட்டது. மேலும் வீட்டின் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பைக்குகளில் தீப்பிடித்து எரிந்தன. திடுக்கிட்டு எழுந்த சமயேந்திரன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தார். இதில் இரண்டு பைக்குகள், 150 கிலோ ரப்பர் சீட் உட்பட சுமார் ரூபாய் மூன்று லட்சம் மதிப்பில் பொருட்கள் எரிந்து நாசமானது. இதுசம்பந்தமாக அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.