குளச்சல் - Kulachal

குளச்சல்: மீனவர் குடும்பத்திற்கு ரூ. 2 இலட்சம் காசோலை

குளச்சல்: மீனவர் குடும்பத்திற்கு ரூ. 2 இலட்சம் காசோலை

குமரி மாவட்டம் கோடிமுனை மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் ஜீடின் என்பவர் 13.11.2024 அன்று மாலை கடலில் மீன்பிடித் தொழிலுக்காகச் சென்றிருந்த நிலையில் மின்னல் தாக்கி மாயமானார். 14.11.2024 அன்று அவரது படகு மட்டும் தனியாக கடலில் மிதந்துள்ளது.  அவரது மனைவி மரியாசாந்தி என்பவரால் குளச்சல் கடலோர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 15.11.2024 காலை உடல் சடலமாக மீட்டெடுக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடலில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்று இறந்த மீனவரின் வாரிசுதாரருக்கு தமிழ்நாடு மீனவர் நலவாரியம் மூலம் வழங்கப்படும் விபத்து மரண நிவாரணத் தொகைக்கான காசோலை ரூ.2 இலட்சம் வாரிசுதாரராகிய அவரது மனைவி மரியாசாந்தி என்பவருக்கு இன்று (17-ம் தேதி) வழங்கப்பட்டது.  மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா வழங்கினார். குளச்சல் எம்எல்ஏ பிரின்ஸ், மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்னக்குப்பன், கல்குளம் வட்டாட்சியர் சஜித், துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా