தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று (நவ.17) காலை வரை, இயல்பை விட 3% கூடுதலாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் அக்.01 முதல் நவ.17 வரை 298.7 (மி மீ) மழை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 288.9 (மி மீ) தான் பெய்யும். ஆகவே, தற்போது வரை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 3% அதிகமாக பெய்துள்ளது. மேலும், சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 5% கூடுதலாக பெய்துள்ளது.