நாம் தமிழர் கட்சி சார்பில் குளச்சலில் இன்று (12-ம் தேதி) மாலை பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் சீமான் கலந்து கொள்கிறார். இதற்காக குளச்சல் அண்ணா சிலை அருகேயுள்ள வழிபாட்டு தலம் அடுகில் மேடை அமைப்பதில் தகராறு ஏற்பட்டது.
அப்பகுதியில் வசிக்கும் நபர் தன்னுடைய வீட்டிற்கு செல்லும்போது காரை வழிமறித்து அடித்து உடைத்து, கார் உரிமையாளரையும் பலமாக தாக்கியதில் அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தில் 3 பேர் படுகாயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை அடுத்து சர்ச்சைக்கு காரணமான விழா மேடை வேறு பகுதிக்கு மாற்ற போலீசார் உத்தரவிட்டனர். அதனால் அண்ணா சிலை அருகே வேறு பகுதிக்கு மாற்றி அமைக்கும் முயற்சியில் தொண்டர்கள் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பதட்டமாக இருப்பதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இன்றும் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.