நடிகை கஸ்தூரிக்கு 29ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைப் பேச்சு தொடர்பான விவகாரத்தில், ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த நடிகை கஸ்தூரியை கைது செய்த போலீஸார் இன்று (நவ.17) சென்னை அழைத்து வந்தனர். இதையடுத்து, கஸ்தூரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு நவ.29ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி ரகுபதி உத்தரவிட்டுள்ளார்.