குறும்பனை: சீட்டு நடத்தி மோசடி - பெண் கைது

52பார்த்தது
குறும்பனை: சீட்டு நடத்தி மோசடி - பெண் கைது
குளச்சல் அருகே குறும்பனை அன்னை தெரசா காலனியை சேர்ந்தவர் அந்தோணி குருஸ் மனைவி மேரி லதா (55). இவர் குறும்பனை பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கி ரூபாய் 5 லட்சம் முதல் 20 லட்சம் வரையிலான மாத சீட்டு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதில் அந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பலர் பணம் கட்டியுள்ளனர். ஆனால் பணம் திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு மேரி லதாவிடம் பணம் கட்டிய குறும்பனை சிலுவையா தெருவை சேர்ந்த டேவிட் ராஜா மனைவி ராஜ மேரி (60) என்பவர் தனது பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். 

ஆனால் பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜ மேரி குளச்சல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மேரி லதா, நினு, சனிபா, சுஜின் என்ற 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் மேரி லதாவை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் வேறு யாராவது பணம் கட்டி ஏமாற்றப்பட்டார்களா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி