செய்யூர் - Seiyur

தாம்பரத்தில் கலெக்டர் ஆலோசனை கூட்டம்

தாம்பரத்தில் கலெக்டர் ஆலோசனை கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள திருநீர்மலை, சிட்லப்பாக்கம், பெருங்களத்துார், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம் மற்றும் புதியதாக இணையவுள்ள முடிச்சூர், அகரம்தென், மதுரப்பாக்கம் உள்ளிட்ட 15 ஊராட்சிகளில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அவற்றுடன், நந்திவரம்- கூடுவாஞ்சேரி மற்றும் அதை ஒட்டியுள்ள 10 ஊராட்சிகளிலும், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், தாம்பரம் மாநகராட்சியில், நேற்று(செப்.14) ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தாம்பரம் மாநகராட்சி கமிஷ்னர் பாலச்சந்தர், பல்லாவரம் தி.மு.க. ,எம்.எல்.ஏ. , கருணாநிதி மற்றும் அந்தந்த பகுதிகளை சார்ந்த குடியிருப்போர் நலச்சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் பங்கேற்று, தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து, பாதாள சாக்கடை திட்டம் குறித்து, திரையின் வாயிலாக விளக்கப்பட்டது. இதில், கலெக்டர் அருண்ராஜ் பேசியதாவது: ஆலோசனை கூட்டத்தில், பல வகையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பலர், புரிதலுடன் எங்கு பிரச்னை நடக்கிறது என்பதை சரியாக எடுத்து கூறினர். மக்களின் கருத்துக்களை திட்ட ஆலோசகர்கள் ஏற்று, முடிந்த வரை சரிசெய்து செயல்படுத்தப்படும். மக்கள் தெரிவித்த கருத்துக்களை சேர்த்து, அரசுக்கு அனுப்பப்படும் என இவ்வாறு கலெக்டர் பேசினார்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా