மஞ்சள் நிற ஆடை அணிந்து கையில் சூலம் ஏந்தி போக்குவரத்தை சீர் செய்யும் மர்ம ஆசாமியின் வீடியோ இணையத்தில் வைரல்.!!!
சென்னை புறநகர் பகுதியான மகேந்திரா சிட்டி பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் அதிக அளவிலான தனியார் ஹோட்டல்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளதால் காலை மற்றும் மாலை நேரத்தில் மகேந்திரா சிட்டி முதல் வீராபுரம் செல்லும் பிரதான சாலையில் எப்பொழுதுமே பரப்பரப்பாக காணப்படும்
இந்த நிலையில் இன்று மஞ்சள் நிறம் கொண்ட ஆடை அணிந்து கையில் சூலம் வைத்துக் கொண்டு தன்னை கடவுள் என நினைத்துக் கொண்டு போதை ஆசாமி ஒருவர் போக்குவரத்தை சீர் செய்வதாக அங்கும் இங்கும் அலைந்து கொண்டும் வாகனத்தை தடுத்து நிறுத்திக் கொண்டும் சேட்டைகள் செய்து வந்துள்ளார்
இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார் தற்பொழுது அந்த காட்சியை பலரால் பகிரப்பட்டு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.!!
போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்கு போலீசார் இல்லாததால் கடவுளே வந்து போக்குவரத்து நெரிசலை சீர் செய்து வருவதாக நிட்டிசன்கள் போதையாசாமியை கலாய்த்து மீம்ஸ் கிரியேட் செய்த வண்ணம் உள்ளனர்.!!