SP கோவிலில் அதிவேகமாக காரை ஓட்டிய வடமாநில இளைஞர்

60பார்த்தது
தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக காரை இயக்கிய வட மாநில வாலிபர்

மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்.!!!

அபராதம் விதித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்த போக்குவரத்துக் காவல்துறை


செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று அதிவேகமாக சென்றதாகவும் சாலையில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ ஆகியவற்றை இடித்துவிட்டு நிற்காமல் சென்றுள்ளது

அப்போது தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சக வாகன ஓட்டிகள் அந்த காரை மடக்கி பிடித்து போக்குவரத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்ததில் ஓட்டுநர் பெயர் நீராஜ் குமார் குப்தா என்பதும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வாலிபர் என்பதும் தெரியவந்தது

பின்பு போக்குவரத்து போலீசார் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனத்தை இயக்கியதாகவும், சாலையில் நின்று கொண்டிருக்கும் வாகனத்தை இடித்து விட்டு நிற்காமல் சென்றதற்காக அபராதம் விதித்தனர்

மேலும் சாலை விதியை முறையாக மதிக்க வேண்டும் எனவும் மீண்டும் வாகனத்தை இதுபோல் இயக்கக் கூடாது என்று எச்சரித்தும் அறிவுரை கூறியும் அனுப்பி வைத்தனர்.

சிங்கப்பெருமாள் கோவில் அருகே தாறுமாறாக ஓடிய காரை பொதுமக்களே மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி