மதுராந்தகத்தில் குட்கா விற்ற இருவர் கைது

58பார்த்தது
மதுராந்தகம் அருகே பதுக்கி வைத்திருந்த 269 கிலோ குட்கா போதை பொருள் போலீசார் பறிமுதல் இருவர் கைது இரு இருசக்கர வாகனம் பறிமுதல்




செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வன்னியர் பேட்டையில் பெட்டிக்கடை நடத்தி வரும் ரவி என்பவர் இவர் மதுராந்தகம் அருகே உள்ள வில்வாராய நல்லூர் பகுதியில் குடோனில் குட்கா போதை பொருள் கடத்தி வந்து பதுக்கி வைத்திருப்பதாக மதுராந்தகம் போலீசருக்கு வந்த ரகசிய தகவலின் பெயரில் இன்று காலை மதுராந்தகம் காவல் ஆய்வாளர் முத்துக்குமரன் தலைமையில் குடோனை சோதனை செய்ததில் மூட்டை மூட்டையாக இருந்த 35 மூட்டைகளை பறிமுதல் செய்ததில் 269 கிலோ விமல் ஹான்ஸ் கூலிப் என போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன
இதன் காரணமாக பதுக்கி வைத்திருந்த பெட்டிக்கடை உரிமையாளர் ரவி அவருடன் விற்பனைக்கு துணையாக இருந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்
அவர்கள் இடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்தனர் விசாரணையில் பெட்டிக்கடை உரிமையாளர் ரவி ஏற்கனவே பலமுறை அவர்களிடமிருந்து பல முறை குட்கா பதுக்கி வைத்து விற்பனை சம்மந்தமாக இவரிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டன எச்சரித்தும் வழக்குகளும் பதிவு செய்தனர் மேலும் கைது செய்து சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி