மேல்மருவத்தூரில் அரசு பேருந்து பழுது பயணிகள் அவதி

83பார்த்தது
மேல்மருவத்தூரில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பயணிகள் காத்துக்கிடக்கும் அவல நிலை



தீபாவளி பண்டிகை மற்றும் வார இறுதி நாள் முடிந்து
கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு 52 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் என்ற இடத்தில் வந்து கொண்டு இருந்த அரசு பேருந்து பழுதாகி நின்றதால் அரசு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி தேசிய நெடுஞ்சாலை ஓரம் நிற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து சோத்துப்பாக்கம் என்ற இடத்தில் முன்னாள் சென்ற கார் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது உடனடியாக அப்பகுதிக்கு வந்த போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி