வருவாய்த்துறை ஊழியர்கள் செங்கல்பட்டில் போராட்டம்

56பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 27. 06. 2024 அன்று மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் ஜமாபந்தி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளார். அப்போது, செய்யூர் வருவாய் ஆய்வாளர் கல்பனாவை அழைத்து குறிப்பிட்ட ஒரு வாரிசு சான்றிதழை ஏன் பரிந்துரை செய்யவில்லை என கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 28. 06. 2024 அன்று தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

தொடர்ந்து கடந்த 04. 11. 2024 அன்று செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 22 வருவாய் துறை ஊழியர்கள் மீது வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாகவும், வரும் 15. 11. 2024 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் வழங்கப்பட்டுள்ளதை கண்டித்தும், இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி