நடுபழனி மரகத தண்டாயுதபாணி திருக்கோயிலில் வேல் பாதயாத்திரை

52பார்த்தது
மதுராந்தகம் அருகே உள்ள நடுபழனி மரகத தண்டாயுதபாணி திருக்கோயிலில் வேல் பாதயாத்திரை நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் நமச்சிவாய சபை மறைமலைநகர் நகரத்தார்கள் சார்பில் 19-ஆம் ஆண்டு வேல் பாத யாத்திரை நடுபழனி மரகத தண்டாயுதபாணி திருக்கோவிலில் நிறைவு அடைந்தது.

மறைமலைநகர் பகுதியில் வைரவேல், காவடி பூஜை செய்தபின் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள்
குழுவினர் சிங்கபெருமாள்கோயில், செங்கல்பட்டு, படாளம், கருங்குழி, மதுராந்தகம், சித்தாமூர் வழியாக பெருங்கரணை எனப்படும் நடுபழனிக்கு பாத யாத்திரையாக வந்தனர். பல்வேறு வகை காவடிகளுடன் வந்த பாதயாத் திரை குழுவினர் படிபூஜை, ஏக ருத் திர பாராயணத்துடன், திருப்புகழ் பாடல்களை பாடிக் கொண்டு வைரவேல், காவடிகளை ஏந்தி பக்தர்கள், 108 பெண்கள் பால்குடம் ஏந்திக்கொண்டு மூலவர் சந்நிதியை வந்தடைந்தனர்.

அங்கு மூலவரான மரகத தண்டாயுத பாணிக்கு பாலபிஷேகம் மற் றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு
பக்தர்களுக்கு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி