செய்யூர் - Seiyur

திருப்போரூரில் குழந்தைகள் தின விழா

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றிய நெல்லிக்குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் உதவும் கரங்கள் மற்றும் ஆதிவாசி சமூக சேவை அமைப்பும் சேர்ந்து நடத்திய குழந்தைகள் தின விழா உதவும் கரங்கள் அமைப்பின் இயக்குனர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. பரை இசையுடன் நிகழ்ச்சிகள் துவங்கியதை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களாக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் ஆரோன்ஜோஸ்வா ரூஸ்வெல்ட் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் பேசியவர்கள் தமிழக அரசு இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.  அவர்கள் வழியில் அனைவருக்கும் தரமான கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் விதமாக உதவும் கரங்கள் மற்றும் ஆதிவாசி சமூக சேவை அமைப்பு செயல்பட்டு வருகிறது என்றும் இருளர் மற்றும் பழங்குடியின மக்களின் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி இந்த அமைப்பு சேவை செய்து வருவதாக தெரிவித்தனர். பழங்குடியின மாணவியரின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வேலு நாச்சியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் குறித்து அவர்களது வரலாற்றை மாணவ மாணவியர் ஒப்பித்தனர். ஒப்பித்த மாணவ மாணவியருக்கு பரிசு பொருட்களுடன் மரக்கன்றுகளை வழங்கினர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా