அமெரிக்காவில் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்ய டொனால்டு டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் தலைமையிலான ஆட்சியில் தேசிய அவசரநிலை கொண்டு வரப்பட்டு, ராணுவத்தை பயன்படுத்தி பெருமளவிலான புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்தவுள்ளார் என்று எக்ஸ் சமூக ஊடகத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார். அந்த பதிவுக்கு பதிலளித்த டிரம்ப், "உண்மைதான்" என்று ஒப்புக்கொண்டுள்ளார்.