சோத்துப்பாக்கத்தில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

66பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் அருகே உள்ள
சோத்துப்பாக்கத்தில் தமிழ்நாடு
மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் தமிழக அரசை கண்டித்து கண்டன
ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகம் முழுவதும் சுமார் 30 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட நியாய விலை கடைகள் இயங்கி வருகிறது இதில் சுமார்
20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நியாய விலை கடைகளில் கிராமப்புறங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது கடைகளில் சுமார்
25, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் இந்நிலையில்
3 அம்ச கோரிக்கைகளான பணியாளர்கள் செய்யும் சிறு தவறுகளுக்கு கூட அதிக அளவில் அபராதம் விதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் பணியாளர்கள்
நலன் கருதி உத்தரவை ரத்து
செய்ய வேண்டும்,

காலாவதியான பொருட்களை திரும்ப எடுத்துக் கொள்வதற்கு பதிலாக சம்பந்தப்பட்ட விற்பயான விற்பனையாளர்கள் அவ்வாறான தொகையினை திரும்ப செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தி வசூல் செய்து வருவதை நிறுத்த வேண்டும்,

குறிப்பாக பணியாளர்கள் சொந்த மாவட்டத்திலேயே பணி வழங்கிட வேண்டும் என்ற மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழக அரசை கண்டித்து மாவட்டத் துணைத் தலைவர் செங்கல்பட்டு டாக்பியா தனசேகரன் தலைமையில்
கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி