Oct 06, 2024, 15:10 IST/
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியா வருகை
Oct 06, 2024, 15:10 IST
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இன்று முதல் 10-ந்தேதி வரை அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். டெல்லி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய முகமது முய்சு மற்றும் அவரது மனைவி சஜிதா முகமது ஆகியோரை மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் நேரில் சென்று வரவேற்றார். மாலத்தீவின் அதிபராக பதவியேற்ற பிறகு இந்தியாவிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும்.