
பவானிசாகரில் 100 நாள் வேலை தொழிலர்கள் சாலை மறியல்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர், புங்கார் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் பவானிசாகர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஒன்றிய செயலாளர் வேலுமணி தலைமையில் புங்கார் பஞ்சாயத்தை சேர்ந்த 100 நாள் வேலை வாய்ப்பு தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர், தங்களுக்கு கடந்த 9 வாரங்களுக்கான சம்பளம் நிலுவை வழங்கப்படாததை கண்டித்தும், காலம் தாழ்த்தாமல் தொகையை உடனே வழங்க கோரி பவானிசாகர் - பண்ணாரி மெயின் ரோட்டில், புங்கார் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் சம்பளத் தொகையை அளிக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.