திம்பம் மலைப்பாதையில் மரம் லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி மரம் பாரம் ஏற்றி சென்ற லாரி திம்பம் மலைப்பாதை 13வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது அதிக பாரம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் சிறு காயத்துடன் உயிர் தப்பினார். இதனால் தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தினசரி அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் கொண்டை ஊசி வளைவுகளில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகுவதால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்