பவானிசாகரில் பைக்கில் இருந்து கீழே விழுந்து ஒருவர் படுகாயம்

65பார்த்தது
பவானிசாகரில் பைக்கில் இருந்து கீழே விழுந்து ஒருவர் படுகாயம்
ஈரோடு மாவட்டம், பவானிசாகர், சுஜில் குட்டையைச் சேர்ந்தவர் தீபக் இவர் பைக்கை ஓட்டி பின்னால் அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் அமர்ந்து சென்றுள்ளார். பவானிசாகர் அணையின் ஜீரோ பாயிண்ட் அருகே இருவரும் பைக்கை வீலிங் செய்ததாக கூறப்படுகிறது. இதில் பின்னால் அமர்ந்த நாகராஜ் படுகாயம் அடைந்தார். 

அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். பவானிசாகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி