தாளவாடி அருகே கர்நாடக மது விற்றவர் கைது

64பார்த்தது
தாளவாடி அருகே கர்நாடக மது விற்றவர் கைது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அடுத்த தொட்டாபுரம் பகுதியில் ஆசனூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தவரின் பையை வாங்கி போலீசார் சோதனையிட்டனர். சோதனையின்போது அந்த பையில் 6 கர்நாடக மாநில மதுபாட்டில்கள் இருந்ததை போலீசார் கண்டனர்.

 இதைத்தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முதியனூரை சேர்ந்த ரங்கா ராம் (வயது 38) என்பதும், கர்நாடக மாநிலத்துக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி வந்து இங்கு விற்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி