தங்கம் பதக்கம் வென்ற மாணவனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

67பார்த்தது
நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற மாணவனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு



ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் கார்முகிலன், கோவை தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் சிறு வயது முதலே சிலம்ப பயிற்சி பெற்று வருகிறார். அண்மையில் நேபாளத்தில் சீனா, நேபாளம், இந்தியா, பூட்டான் உள்ளிட்ட நான்கு நாடுகள் கலந்து கொண்ட சர்வதேச சிலம்பப் போட்டி நடைபெற்றது. இதில் கார்முகிலன் கலந்து கொண்டு தமிழர்கள் பாரம்பரிய சிலம்பாட்ட பிரிவிலும், தனிநபர் பிரிவிலும் இந்திய விற்கு தங்கப்பதக்கத்தை வென்று பெருமை சேர்த்து உள்ளார். பதக்கத்துடன் சொந்த ஊரான சத்தியமங்கலம் வந்த மாணவனுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதுகுறித்து கூறிய மாணவர் தற்போது தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பம் குறித்து அரசு போதிய விழிப்புணர்வுக் ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக பலரும் இந்த கலையை ஆர்வமுடன் கற்று வருகிறார்கள். இந்நிலையில் உலக அளவில் சிலம்பதிற்கு அங்கீகாரம் பெறும் வகையில் சிலம்பம் விளையாட்டை இணைக்க வேண்டும் என தங்க பதக்கம் பெற்ற கார் முகிலன் மத்திய மாநில் அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி