பவானி - Bhavanisagar

அந்தியூர் பகுதியில் பலத்த காற்றால் வாழை மரங்கள் சேதம்

அந்தியூர் பகுதியில் பலத்த காற்றால் வாழை மரங்கள் சேதம்

அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 4 மணி முதல் மழை பெய்தது. இரவு நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. பலத்த காற்றால் ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது. பலத்த காற்றுக்கு தாக்குப் பிடிக்காமல் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வாழைமரங்கள் விழுந்தன. அறுவடைக்குத் தயாராக இருந்த வாழைமரங்கள் விழுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.  உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மாலை பலத்த காற்றும், இடியுடன் கூடிய மழையும் பெய்தது. அம்மாபேட்டை அடுத்துள்ள நத்தமேடு, மணக்காடு தோட்டத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் 5 நாட்டுப் பசுக்களை வளர்த்து வருகிறார். நேற்று மழை பெய்தபோழுது மாடுகளைக் கட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். அப்போது அந்தப் பகுதியில் பெரும் சத்தத்துடன் இடி பிடித்து மின்னல் அங்கிருந்த மூன்று மாடுகளைத் தாக்கியது. இதில் 2 மாடுகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தன. மற்றொரு மாடு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. மின்னல் தாக்கியபோது மாட்டின் அருகே யாரும் செல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా