கோவிலில், காவல்துறையால் செய்தியாளர்கள் அவமதிக்கப்பட்ட செயல்

64பார்த்தது
வன்மையாக கண்டிக்கிறோம்.

ஈரோடு மாவட்டம் பன்னாரியில் அமைந்துள்ள அருள்மிகு பன்னாரி மாரியம்மன் திருக்கோயில் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குவது வழக்கம். இதனை ஆண்டுதோறும் செய்தியாளர்கள் நேரடியாக சென்று செய்தி சேகரிப்பது வழக்கமான நடைமுறை. இந்த நிலையில் இந்த ஆண்டு குண்டம் திருவிழாவில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை உள்ளே விட மறுத்து காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் செய்தியாளர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளனர். காவல் துறையின் இந்த செயலை ஈரோடு மாவட்ட அனைத்து செய்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். இது தொடர்பாக அனைத்து செய்தியாளர்களையும் ஒருங்கிணைத்து விரைவில் காவல்துறையின் செயலை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்
ஈரோடு மாவட்ட செய்தியாளர்கள் கூட்டமைப்பு

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி