மீன் பிடிக்க சென்ற மாணவன் குட்டையில் மூழ்கி பலி

78பார்த்தது
தாளவாடி அருகே மீன் பிடிக்க சென்ற மாணவன் குட்டையில் மூழ்கி பலி


ஈரோடு மாவட்டம்,
தாளவாடி அருகே உள்ள தருமாபுரம் பகுதியை சேர்ந்தவர் சித்தராஜு கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரத்தனம்மாள் இவர்களது மகன் சித்தப்பாஜி (16) பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார்.
இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் அருகே உள்ள குட்டைக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சித்தப்பாஜி குட்டை நீரில் மூழ்கினார். நீச்சல் தெரியாததாலும், குட்டையில் சேறு அதிகமாக இருந்ததால் அவரால் வெளியே வர முடியாமல் தவித்துள்ளார். இதை உணர்ந்த நண்பர்கள் சத்தம் போட்டனர். இதை கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர். சம்பவம் குறித்து தாளவாடி போலீஸாருக்கு தகவல் அளித்தனர். சம்பவம் இடத்துக்கு சென்ற போலீசார் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். நேற்று மாலை திம்பம் மலைப் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பண்ணாரி கோவில் திருவிழாவிற்கு வந்த தீயணைப்பு வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திற்கு செல்லும் போது இரவு ஆனது. இதையடுத்து இன்று காலை தீயணைப்புத் துறையினர் குட்டையில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய இறந்த நிலையில் மாணவனை மீட்டனர். தாளவாடி போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி