ஒசூர்: நேற்று பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே சாலையில் விரிசல்

78பார்த்தது
ஒசூர்: நேற்று பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே சாலையில் விரிசல்
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் 4.08 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஓசூர் செல்லும் சாலை நேற்று பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் முறையாக திட்டமிடாமல் அமைத்ததால் கழிவுநீர், மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கின்றது. தாளவாடியில் இருந்து ஓசூர் செல்லும் சாலை கடந்த பல ஆண்டுகளாக சேதம் அடைந்து குண்டும் குழியாக காணப்பட்டது. இதனை அடுத்து பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்ததை அடுத்து நெடுஞ்சாலை துறை மூலம் 4 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று பெய்த மழையில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் முறையாக திட்டமிடாமல் வடிகால் மற்றும் சிறு பாலங்கள் அமைத்ததால் மழைநீரானது வடிகாலில் செல்லாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும் தனி நபருக்கு சொந்தமான இடங்களில் கழிவுநீரும் குப்பைகளும் தேங்கி நிற்கின்றன. முறையாக திட்டமிடாமல் அலட்சியமாக செயல்பட்டு அரசு பணத்தை வீணடித்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீதும், பணி செய்த ஒப்பந்ததாரர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மழை நீர் குளம் போல் தேங்காமல் செல்லவும் விரிசல் அடைந்த சாலையை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி