ஈரோடு: முட்டைக்கோசை டிராக்டரால் அழித்த பரபரப்பு வீடியோ

65பார்த்தது
தாளவாடி அருகே விவசாய நிலத்தில் முட்டைக்கோசை டிராக்டரால் அழித்து வீடியோ வெளியிட்டு விவசாயி வேதனை. ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே அண்ணா நகர் பகுதியை சேர்ந்த மாதேஷ் என்பவரது விவசாய நிலத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தில் முட்டைக்கோசை சாகுபடி செய்திருந்தார். ஆனால் வியாபாரிகள் 40 பைசா, 50 பைசா என கிலோவிற்கு விலை நிர்ணயம் செய்து கேட்டதால் வேதனை அடைந்த விவசாயி தனது நிலத்தில் சாகுபடி செய்திருந்த முட்டைக்கோசை டிராக்டர் விட்டு உழுது அழித்தார். மேலும் தாளவாடி பகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் செய்து வரும் அனைத்து விவசாயிகளும் மிகவும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். தங்களது வாழ்வாதாரமாக விவசாயத்தை நம்பி உள்ள தாளவாடி பகுதி விவசாயிகள் தமிழக அரசிடம் உரிய நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது விவசாயி வீடியோவாக வெளியிட்டது தாளவாடி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி