திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் டிராபிக்ஜாம்

58பார்த்தது
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் 2 மணி நேரம் டிராபிக்ஜாம்



திம்பம் மலைப்பாதையில் கன்டெய்னர் லாரி பழுதாகி நின்றதால் தமிழக-கர்நாடக மாநிலங் களுக்கு இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சத்தி அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் அமைந்துள்ளது. தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய மலைப்பாதை, என்பதால் இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று மாலை கன்டெய்னர் லாரி ஒன்று திம்பம் மலைப்பாதையில் 7-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது திடீரென பழுது ஏற்பட்டு நகர முடியாமல் நின்றது.

இதனால் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. தகவலறிந்து வந்த ஆசனூர் போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் தமிழக - கர்நாடக மாநிலங்களுக்கிடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி