ஈரோடு நகரில் சுற்றி தெரியும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஓராண்டுக்கு முன், தெருநாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், சுமார் 23, 000 நாய்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், தெருநாய்களுக்கு கருத்தடை, தடுப்பூசி போன்ற பணிகள் பெரிதளவில் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக, தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. குறிப்பாக, ஒரு பசு மாடு, 100க்கும் மேற்பட்ட ஆடுகள், 150க்கும் மேற்பட்ட கோழிகளை, தெருநாய்கள் கடித்து குதறியது. இதனால் மாநகராட்சியில் அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில், தற்போது, தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் வெறிநாய்கடி நோய் தடுப்பூசி போன்றவை செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.