பவானி - Bhavani

ஈரோடு: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலகைகள் வைத்ததால் பரபரப்பு

ஈரோடு: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலகைகள் வைத்ததால் பரபரப்பு

ஈரோடு புது மஜித் வீதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கட்சிக் கொடி கம்பமும், தலைவர் தொல் திருமாவளவன், மாவட்ட செயலாளர் படங்கள், பெயர்கள் அடங்கிய பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த பலகை உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது எடுத்து அந்த பலகையை அகற்ற டவுன் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி கட்சியின் பலகை அகற்றப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட செயலாளர் சாதிக் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அகற்றப்பட்ட அதே இடத்தில் மீண்டும் பலகையை வைத்தனர். இதனை அடுத்து மாவட்ட செயலாளர் சாதி கட்சி கொடி ஏற்றினார். 36 -வது வார்டு கவுன்சிலர் பழனியப்பா செந்தில்குமார் உடன் இருந்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் டவுன் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை ஈடுபட்டனர். அப்போது போலீசார் இங்கு உரிய அனுமதி இல்லாமல் பலகை வைக்க முடியாது. மாநகராட்சி இடம் அனுமதி கடிதம் வாங்கி வந்தால் வைத்துக் கொள்ளலாம் என்றனர். அதற்கு விடுதலைக் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மாநகராட்சி இடம் முறையான அனுமதி கடிதம் வாங்கி வருகிறோம் என்று கூறினர்.

வீடியோஸ்


ஈரோடு