ஈரோடு: பழைய முதலாளிகளுடன் ஆயுத பூஜையை கொண்டாடிய இயக்குனர் ராஜகுமாரன்
தமிழ் திரைப்பட உலகில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ராஜ்குமரன். விண்ணுக்கும் மண்ணுக்கும், நீ வருவாய் என உள்பட பல்வேறு படங்களை இயக்கி உள்ளார். நடிகை தேவயானியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இயக்குனர் ராஜ்குமரனக்கு ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த ஆலாம்கரடு பகுதியில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பண்ணை வீடு உள்ளது. இங்கு விடுமுறை நாட்களில் ராஜ்குமரன் மனைவி தேவயானி மகளுடன் வந்து விவசாய பணியில் ஈடுபட்டு வருகிறார். இயக்குனர் ராஜ்குமரன் சிறுவயதில் அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம் பகுதியில் சில வருடங்களாக பல்வேறு தறிப்பட்டறையில் வேலை பார்த்து உள்ளார். இந்நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு ராஜ்குமரன் அந்தியூர் அடுத்த தனது பண்ணை வீட்டுக்கு வந்தார். பின்னர் தறிப்பற்றையில் வேலை பார்த்தபோது இருந்த பழைய முதலாளிகளை அவர்களின் வீட்டுக்கே சென்று சந்தித்து ஆயுத பூஜையை கொண்டாடினார். இயக்குனர் ராஜ்குமரனை பார்த்ததும் பழைய முதலாளிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்து ஆயுத பூஜைக்கு வீட்டில் செய்த சுண்டல், சக்கரை பொங்கலை கொடுத்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். அப்போது இயக்குனர் ராஜ்குமரன் சிறுவயதில் தறிப்பட்டறையில் தான் வேலை செய்த மலரும் நினைவுகளை கூறி நெகிழ்ச்சி அடைந்தார்.