சிவகங்கை வேங்கைபட்டியில் தொடர்மழை காரணமாக கண்மாய்கள் நிரம்பி வெளியேறிய உபரி நீர் விளைநிலங்களில் புகுந்தது. இதனால், சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். புது கண்மாய், வெட்டுமாளி, கட்டயன், பனங்குடி உள்ளிட்ட பல்வேறு கண்மாய்களில் உபரி நீர் செல்ல வழி இல்லாததால் விளைநிலங்களுக்குள் மழை நீர் புகுந்ததில் நடவு செய்து 3 நாட்களே ஆன பயிர்கள் சேதமடைந்ததாக தெரிவித்துள்ளனர்.