வடமதுரை: குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு விழிப்புணர்வு

82பார்த்தது
வடமதுரை: குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு விழிப்புணர்வு
திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் அமுதா தலைமையிலான போலீசார் மற்றும் சைபர் கிரைம் போலீசார் இணைந்து வடமதுரையை அடுத்த கம்பளியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

இந்நிகழ்வில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்தும் போக்சோ சட்டத்தை பற்றியும், போதைப் பொருள் தடுப்பு மற்றும் ஆன்லைன் பண பரிவர்த்தனை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மேலும் இணைய வழி குற்றங்கள் பற்றி புகார் அளிக்க இலவச தொலைபேசி எண்கள் 1098, 181, 1930 ஆகியவற்றை பற்றி எடுத்துரைத்தனர்.

தொடர்புடைய செய்தி