பழனி முருகன் கோயிலில் இத்தாலி நாட்டு பக்தர்கள் சாமி தரிசனம்
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில பக்தர் களும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இத்தாலி உள்ளிட்ட வெளி நாட்டு பக்தர்களும் வருகை தருகின்றனர். இந்நிலையில் இத்தாலி நாட்டை சேர்ந்த 17 பேர் பழனிக்கு வந்தனர். பின்னர் அவர்கள், படிப்பாதை வழியாக மலைக்கோயிலுக்கு சென்றனர். கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள மண்டபங்கள், சிலைகள் ஆகியவற்றை அவர்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு மலைக்கோயிலில் சாமி தரிசனம் செய்து, தங்கரதம் உலா வருவதை கண்டுகளித்தனர். சாமி தரிசனம் செய்ய வந்திருந்த வெளி நாட்டினரை தமிழக பக்தர்கள் ஆர்வமுடன் பார்த்தனர். ' இத்தாலி நாட்டை சேர்ந்த பக்தர்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கேரளாவிற்கு சுற்றுலா வந்துள்ளனர். தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சென்று சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து நேற்று(அக்.28) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் முடித்த பிறகு நேற்று மாலை பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது. பழனியில் தரிசனத்தை முடித்துக் கொண்ட இத்தாலி நாட்டினர் கோவை ஈஷா யோகா மையத்துக்கு புறப்பட்டு சென்றனர்.