திண்டுக்கல்: அமெரிக்க அருங்காட்சியகத்தில் 19ம் நுாற்றாண்டு செப்பேடு
திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயில் காலசந்தி பூஜை, திருமஞ்சன கட்டளைக்காக 19ம் நுாற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு சமூக செப்பேடு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மெட்ரோபாலிடன் அருங்காட்சியகத்தில், ஆசியப் பிரிவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழில் எழுதப்பட்ட இச்செப்பேட்டை, 24 கொங்கு நாடுகளைச் சேர்ந்த ஒரு சமூக மக்கள், பழனி முருகனுக்கு நித்தியப்படிக்கு திருமஞ்சனம், சரமாலை, வில்வ அர்ச்சனைக்காக திருக்கணக்கு பண்டாரத்தை ஏற்பாடு செய்த தகவல் உள்ளது. இச்செப்பேடு, 34. 3 செ. மீ. , உயரம், 23. 8 செ. மீ. , அகலத்தில் உள்ளது. இரு பக்கமும், 119 வரிகளில் எழுதப்பட்டுள்ளது.