வடகிழக்கு பருவமழை துவங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து வெளியிட்டது. இந்த நிலையில் பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான பால சமுத்திரம், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி, கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியே செல்லுகின்றனர். முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.